சிந்தனை செய்மனமே

சிந்தனை செய்மனமே வேகமாக வீட்டிற்குள் வந்த இராமசுப்பு கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவாறே தொலைக்காட்சியை இயக்கிவிட்டு ஒரு பிரதானமான அலைவரிசையில் வரும் 7.00 மணிக்கான செய்தி வாசிப்பைக் காண்பதற்காக நாற்காலியில் ஆர்வத்துடன் | அமர்ந்தார். அப்போது தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரின் பேட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அப்பேட்டியில் அத்தலைவர் “எங்களுக்கும் ஆள்வதற்குரிய ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அப்போது நாங்கள் இந்த பிரபஞ்சத்தையே கூட மாற்றிக் காட்டுவோம்” என சூளுரைக்துக்கொண்டிருந்தார். இதனைக்கேட்ட இராமசுப்பு உரக்க வாய்விட்டுச் சிரித்தார். தொலைக்காட்சியில் தலைவரின் பேட்டியும் தந்தையின் சிரிப்பொலியும் அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவரது மகள் தமிழ்ச்செல்வியின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. உடனே அவள் தனது தந்தையிடம் சென்று பிரபஞ்சம் என்றால் என்ன? இந்த மாமாவால் அதனை மாற்றிவிட முடியுமா? என்றும் கேட்டாள். தனது செல்லமகளிடமிருந்து எழுந்த இந்த கேள்விஞானம் அவரை பெரிதும் வியப்படையச் செய்தது. உடனே சமையலறைக்குச் சென்ற அவர் ஒரு உப்புப்பாத்திரத்தையும் குண்டூசி ஒன்றையும் கொண்டுவந்து அருகே வைத்துக்கொண்டு, தனது மகளை வாஞ்சையுடன் மடிமீது அமரவைத்துக்கொண்டார். பின்பு தனது மகளிடம் “பிரபஞ்சம் என்பது எல்லையில்லாதது என்றும், நாம் வாழும் இப்பூமியை பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? என அவளிடம் கேட்க அவள் தெரியாது என்று தலையை ஆட்டினாள். -உடனே அவர் அருகிலிருந்த உப்பு பாத்திரத்தை கையிலெடுத்துக்கொண்டு இதனை பிரபஞ்சம் என நினைத்துக்கொள். இந்த குண்டூசியின் மூலம் உப்பைத்தொட்டால் இதன் முனைமீது படியும் நுண்ணிய அளவுள்ள உப்புத்துகள் போன்றவையே கணக்கிலடங்காத கிரகங்கள் -ஆகும். இந்த பேரண்டத்தில் | சுழன்றுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கிரகங்களில் ஒன்றான சிறிய பூமிப்பந்தில் இன்னும்கூட ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி என்று கூறிக்கொண்டு வாழும் மனிதர்கள் முட்டாள்களே என்று கூறினார். அதற்கு தமிழ்ச்செல்வி சற்றும் தாமதிக்காமல் “அனைத்து அறிவாளிகளும் நம் ஊரில் தான் இருக்கிறார்கள் போல” என சுட்டித்தனமாகக் கூறியதுடன், “சரி விடுங்கப்பா, நான் இப்போது நான்சியுடனும், | பாத்திமாவுடனும் விளையாடச் செல்கிறேன். அவர்கள் என்னுடைய உடன்பிறவா சகோதரிகள் ஆயிற்றே” என சொல்லியதைக்கேட்ட இராமசுப்பு மிகவும் பெருமிதத்துடன் நாற்காலியில் சாய்ந்தார். வள்ளுவம் கூறும் நீதி: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் - குறள் 191:-(விளக்கம் :- கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களை சொல்கின்றவன் எல்லோராலும் இகழப்படுவான்) - ஆக்கம்:-நமது தேடல் நிருபர் ... மா.கார்த்திக் விஜேந்திரா,சேலம்